128 வது வார்டு கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனுக்கு எம்பி கனிமொழி வாழ்த்து
சென்னை அடுத்த விருகம்பாக்கத்தில் 128 வது வார்டில் பருவமழையால் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளார் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரன்.


128 வது வார்டு சாரதா நகர் பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கி இருப்பதாக கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனுக்கு பொது மக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் இரவு பகல் பாராமல் பம்பரம் போல் சுழன்று ஜேசிபி இயந்திரம் மூலமாகவும் மோட்டார் பம்பு மூலமாகவும் வடிகால் நீரை அகற்றி பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து Elango Nagar, Sai பாபா காலனி, வெங்கடேஸ்வரா நகர், தாரா சந்த் நகர், சஞ்சய் காந்தி நகர், கிருஷ்ணா நகர், காமராஜர் சாலை, பங்காரு காலனி, மாரியம்மன் கோவில் தெரு, AVM காலனி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக சார்பில் மக்களிடம் வெளியூரிலிருந்து வந்து இங்க தேர்தலில் நிற்கிறார் வென்றாலும் வார்டில் தங்க மாட்டார், மக்கள் சந்திக்க முடியாது என பிரச்சாரம் செய்ததார்கள்.
திமுக
வேட்பாளருக்கு ஆதரவாக Kanimozhi Karunanidhi, எம்.பி., அவர்கள் உள்ளாட்சி
தேர்தல் பிரசாரத்தின் போது வெளியூர் வேட்பாளர் தான் வெற்றி பெற்றால் நிச்சயம் உங்களுடன் இருப்பார், உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பார் என பேசினார்கள்..
அதை நிரூபிக்கும் வகையில் வெற்றி பெற்ற உடனே இங்கேயே நிரந்தரமாக வீடு எடுத்து மக்கள் பணியாற்றி வருகிறார்
24 மணி நேரமும் மழையில் பணியாற்றி பொது மக்கள் மனத்தில் இடம் பிடித்து விட்டார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு பெண் கவுன்சிலரை தான் பார்த்ததே இல்லை என்று பதிவு செய்துள்ளார். அதற்கு ரத்னா லோகேஸ்வரனும் மறு பதிவு செய்து நன்றி தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் இந்த பதிவை பார்த்த எம்பி கனிமொழியும் ரத்னா லோகேஸ்வரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு செய்துள்ளார்
வட்ட கழக செயலாளர்கள் கோவிந்தராஜ், ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உதவியுடன்