Chennai Photo Biennale Edition III டிசம்பர் 9 சென்னை போட்டோ பயன்னலே மூன்றாம் பதிப்பு
சென்னை ஃபோட்டோ பயன்னலேயின் மூன்றாவது பதிப்பு 9 டிசம்பர் 2022 முதல் 6 பிப்ரவரி 2022 வரை நடைபெறுகிறது. இதில் டிஜிட்டல் கண்காட்சிகள், நேரடிக் கண்காட்சிகள், இணைய இதழ்கள், பயன்னலே வெளியீடுகள், கலைஞர்களின் உரைகள், புகைப்பட விருதுகள், மாணவர்களுக்கான நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
● சென்னை புகைப்பட பயன்னலேயின் மூன்றாவது பதிப்பு 2021, டிசம்பர் 9முதல் 2022, பிப்ரவரி 6 நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்படும் ஒரே பயன்னலே இதுவாகும்.
● சென்னை புகைப்பட பயன்னலேயின் மூன்றாவது பதிப்பைஅர்க்கோ தத்தோ, பூமா பத்மநாபன், போஸ் லெவின், கெர்ஸ்டின் மெய்ன்கே ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். “அமைதியின்மையின் வரைபடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள சென்னை போட்டோ பயன்னல்லேவின் மூன்றாம் பதிப்பு, எண்ணம், குரல்கள், கலை ஆகியவற்றில் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதன் வாயிலாகவும், ஒன்றுபட்டு நிற்பதற்கும் பரிவுக்குமான புதிய வலைப்பின்னல்களை உருவாக்குவதன் மூலமும், பெரும்பான்மைவாதத் திணிப்புகள், சூழலியல் சீரழிவு, தொழில்நுட்பக் கொடுங்கோன்மை ஆகிய நம் காலத்துத் தேவைகள் குறித்த சிந்தனையை எழுப்புகிறது.
● பயன்னலே தொடங்குவதற்கு முன்னதாக, ‘த்ரூ தி கிளாஸ் டார்க்லி’ (நவம்பர் 27 அன்று வெளியானது), ‘மேப்ஸ் ஆஃப் டிஸ்கியூட்’ (டிசம்பர் மத்தியில்) என்ற தலைப்பில் இரண்டு இணைய இதழ்கள் வெளியாகின்றன. இந்த இதழ்கள் தாம் தேர்ந்துகொண்ட கருப்பொருள்கள் குறித்த எழுத்துப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், கலைப்படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
● பயன்னலேயில் நேரடிக் கண்காட்சிகள், பல்வேறு விதமான திரையிடல்கள், உரைகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் முதலான பல நிகழ்ச்சிகள் உள்ளன. உரையாடல்கள், புகைப்படச் செயல்பாடு, மாணவர் நிகழ்ச்சிகள், மெய்நிகர் சுற்றுப்பயணங்கள், வழிகாட்டியின் துணையோடு நடக்கும் நேரடிச் சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இந்த பயன்னலேயில் இடம்பெறும்.
சென்னை புகைப்பட பயன்னலேயின் (CPB) மூன்றாவது பதிப்பு, பல்லூடகங்களின் மூலம் நேரடியாகவும் டிஜிட்டல் வடிவங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. ஃபோரம் ஆர்ட் கேலரி, அஷ்விதாஸ் கேலரி, ரோஜா முத்தையா ஆரய்ச்சி நூலகம், சென்னை இலக்கியச் சங்கம், கோதே இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் வீடியோ படைப்புகளின் திரையிடல்கள், நேரடிக் கண்காட்சிகள் ஆகியவை 2021, டிசம்பர் 9முதல் 2022 பிப்ரவரி 6வரை நடைபெறும்.
இணைய இதழ் 1
சிபிபி அறக்கட்டளை, கோதே-இன்ஸ்டிட்யூட்/மேக்ஸ்முல்லர் பவன் (சென்னை) ஆகியவற்றால் நிறுவப்பட்டு நடத்தப்படும் இந்த பயன்னலேவை முன்னிட்டு வெளியாகும் ஆன்லைன் இதழ்கள் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். ஒலிப்பதிவுகள், லென்ஸினூடே உருவாகும் படைப்புகள், விமர்சனபூர்வமான எழுத்துப் பிரதிகள் ஆகியவை இதில் இடம்பெறும். நினைவுகள், பொதுமுடக்கத்தின்போது நிலவிய நிச்சயமற்ற வாழ்க்கை, சுற்றுச்சூழல் பேரழிவுகளின் பின்விளைவுகள், இன்றைய காலத்துக்கும் படிமங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றியதாக இவை இருக்கும். ‘த்ரூ தி கிளாஸ், டார்க்லி’ என்ற தலைப்பில் முதல் இதழ் நவம்பர் 27 அன்று தொடங்கப்பட்டது. ஆன்ட்ரியாஸ் லாங்ஃபீல்ட், கட்ஜா ஸ்டூக்-ஆலிவர் சீபர், அமிதேஷ் குரோவர், நிக்கோலஸ் பொல்லி, பரிபர்தனா மொஹந்தி, பார்வதி நாயர்-நயன்தாரா நாயர், சோராப் ஹுரா, தன்வி எ மிஸ்ரா, யுவன் அவெஸ் ஆகியோரை உள்ளடக்கிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்களின் பங்களிப்புகள் முதல் இதழில் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது இதழ் 2021 டிசம்பரில் ‘அமைதியின்மையின் வரைபடம்’ என்ற தலைப்பில் தொடங்கப்படும். இதழ்கள் வெளியிடும் திட்டம் புது டெல்லியில் உள்ள ப்ரோ ஹெல்வெட்டியா சுவிஸ் ஆர்ட்ஸ் கவுன்சில் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
“இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில், இந்த பயன்னலேவை நடத்துவது, உலகத்தைப் பற்றிய நமது கருத்துக்கள் எவ்வாறு உருவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும், உருவங்கள் எவ்வாறு உலகைப் பார்க்கவும், அதைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன என்பதைப் பற்றியும் சிந்திக்கும் ஒரு வழியாகும். சென்னையிலிருந்து புகைப்படம் எடுத்தல் பற்றிப் பேசும்போது, அதன் காலனித்துவ வேர்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவமாக்கும் திட்டத்தின் முக்கியமானதொரு கருவியாகப் புகைப்படம் எடுக்கும் செயல்பாடு இருந்தது. ஒழுங்குமுறை உத்திகளைகளையும் அவற்றுக்கான வகைமைகளையும் உருவாக்குவதற்கும் இது இன்றையமையாத பங்கை வகித்தது. இது 1856ஆம் ஆண்டிலேயே மெட்ராஸில் உள்ள நுண்கலைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. விரைவிலேயே பல ஆய்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது. இவ்வகையில், கலாச்சார, அறிவியல் அறிவை உருவாக்குவதில் புகைப்பட ஊடகம் பெரும் பங்கு வகித்தது. எங்கள் பயன்னலேவின் நிகழ்ச்சிக் கட்டமைப்பில் இந்த வரலாற்றின் தடங்களை அறிவதில் மட்டும் கவனம் செலுத்த நாங்கள் விரும்பவில்லை, இன்று புகைப்படம் எடுப்பதன் பல்வேறு செயல்பாடுகள், முகமைகள், நடைமுறைகள் ஆகியவற்றை விமர்சன ரீதியாக அணுகுகிறோம். உலகத்தைப் பற்றிய நமது கருத்துக்களை மறுவடிவமைக்கக் கலைஞர்கள் எவ்வாறு படங்களைப் பயன்படுத்துகிறார்கள், சமகாலத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களையும் கதையாடல்களையும் எவ்வாறு சவாலுக்கு உட்படுத்துகிறார்கள், அவற்றின் மீதான கேள்விகளை எவ்வாறு எழுப்புகிறார்கள், படங்களை நாம் நுகரும் விதம் குறித்து நம்மை விமர்சன ரீதியாக எப்படிச் சிந்திக்கவைக்கிறார்கள்? – சென்னை போட்டோ பயன்னலே III-இன் ஒருங்கிணைப்புக் குழு
PARTICIPATING ARTISTS
பங்கேற்கும் கலைஞர்கள்
அமிதேஷ் குரோவர், அனாஸ் டோண்டூர், ஆன்ட்ரியாஸ் லாங்ஃபீல்ட்–சரபி ரவிச்சந்திரன், ஆர்தர் கிரெஸ்டானி, பாபு ஈஸ்வர் பிரசாத், கரோலினா கேசிடோ, கௌரி கில், ஹரூன் ஃபரோக்கி, ஹிடோ ஸ்டெயர்ல், ஜேம்ஸ் பி டெய்லர், ஜானே ஜின் கெய்சன், கட்ஜா ஸ்டூக்–ஆலிவர் சீபர், கேத்ரின் கோன்னிங், லிசா ரேவ், மைக்கேல் ஹன்னா, மோகினி சந்திரா, நிகோ ஜோயனா வெபர், பார்வதி நாயர்–நயன்தாரா நாயர், பேட்ரிக் பவுண்ட், ரோஹிணி தேவாஷர், ரோஹித் சாஹா, ரோரி பில்கிரிம், ரூத் படிர், சஞ்சயன் கோஷ், சரண்ராஜ், செந்தில் குமரன், சிவா சாய் ஜீவானந்தம், சௌமியா சங்கர் போஸ், ஸ்ரீதர் பாலசுப்ரமணியம், சுசானே கிரீமன், டோபியாஸ் ஜீலோனி, வாமிகா ஜெயின், வசுதா தோழூர் மற்றும் யுவன் அவெஸ் உள்ளிட கலைஞர்கள் சென்னை ஃபோட்டோ பயன்னலேவின் மூன்றாவது பதிப்பில் பங்கேற்கிறார்கள்.
International University Collaboration – Students’ Workshop and Project
சர்வதேசப் பல்கலைக்கழக ஒத்துழைப்பு – மணவர்களுக்கான பயிலரங்கமும் திட்டமும்
இந்த பயன்னலேயில் சர்வதேசப் பல்கலைக்கழக மாணவர் ஒத்துழைப்பும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் பயிலரங்கம் ஆகியவையும் அடங்கும்; ஜெர்மனியின் டுயிஸ்பர்க்-எஸ்சென் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ஃபோக்வாங் கலைப் பல்கலைக்கழகம் ஆகியவை இந்திய, ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் கட்டிடக் கலை, கலை வரலாறு, புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் கற்கும் மாணவர்களை ஒன்றிணைத்து, திட்டங்களிலும் பிரதிகளிலும் பணியாற்றச்செய்யும். இவை ஜனவரி 2022இல் காட்சிக்கு வைக்கப்படும்.
“சிபிபி மூன்றாம் பதிப்பு என்பது இயல்பு நிலையைக் கண்டறிய உலகம் போராடும் நேரத்தில் நிகழும் எதிர்ப்பின் செயல்பாடு. புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டு நேரடியாகவும் டிஜிட்டல் வடிவங்களிலும் அற்புதமான கண்காட்சிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சென்னையில் ஏழு இடங்கள், இரண்டு தனித்துவமான டிஜிட்டல் தளங்கள், ஒரு அச்சு வெளியீடு ஆகியவற்றின் மூலம் நடைபெறும் இந்த மூன்றாவது பதிப்பில் 11 நாடுகளைச் சேர்ந்த 50 கலைஞர்கள், பங்களிப்பாளர்களின் படைப்புகள் 60 நாட்களுக்குக் காட்சிப்படுத்தப்படும். – வருண் குப்தா, சென்னை புகைப்பட பயன்னலே இயக்குநர்
பத்திரிகைகள் வெளியான பிறகு, கலைஞர்களின் உரைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களின் கலைப் படைப்புகளின் நேரடிக் கண்காட்சி, கலைப் படைப்புகளின் மெய்நிகர் கண்காட்சி, டிஜிட்டல் திரையிடல், பல்கலைக்கழகப் பரிமாற்ற நிகழ்ச்சிகள், மாணவர்களின் படைப்புகளைக் காண்பித்தல், சிபிபி செயல்பாட்டுக் களம், சிபிபி புகைப்பட விருதுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் வரும் மாதங்களில் சென்னை போட்டோ பயன்னலே மேற்கொள்கிறது