Tuesday, November 19, 2024
Education

Dr. பால் தினகரன் கொழும்பில் இருந்தபோது இலங்கையின் ஜனாதிபதி மேதகு ரணில் விக்ரமசிங்கே அவர்களை கொழும்பில் சந்தித்து

தங்கள் அருட்பணிக்கு கோவிட் பெருந்தொற்று காலங்களிலும் ஆதரவளித்தவர்களுக்கும், ஏழை, எளிய ஜனங்களை பராமரித்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்படியாகவும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்படியாகவும் Dr. பால் தினகரனும் அவரது குடும்பத்தினரும் கொழும்பு மற்றும் காலி பட்டணங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பை ஏற்று இலங்கை சென்றனர். அங்கிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அருட்பணி ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்யும்படி அவர்கள் யாழ்ப்பாணம் செல்ல இருந்தபோது, சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். சில பிரச்னைகள் ஏற்படலாம் என்று தாங்கள் எதிர்பார்க்கிறபடியினால் ஸ்தோத்திர ஜெபக் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று யாழ்ப்பாணத்திலிருந்த உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆகவேதான் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர்.

Dr. பால் தினகரன் கொழும்பில் இருந்தபோது, இலங்கையின் ஜனாதிபதி மேதகு ரணில் விக்ரமசிங்கே அவர்களை கொழும்பில் சந்தித்து, தேசத்தின் நலனுக்காக அவர் எடுக்கும் சீரமைப்பு முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிக்கவேண்டுமென்று பிரார்த்தனை செய்தார். தேசத்தின் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதற்கான தன் விருப்பத்தையும் Dr. பால் தினகரன், ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கை தேசத்தின் ஜனங்களுக்கு உரையாற்றும்படி இலங்கையின் தேசிய தொலைக்காட்சி நிலையத்தினரால் Dr. பால் தினகரன் அழைக்கப்பட்டார்.

சென்னை திரும்பிய பிறகு, பெங்களூருவில் பல்வேறு வேதனைகளோடு, தேவைகளோடு இருக்கும் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி Dr. பால் தினகரன் அன்றைய தினமே பெங்களூரு சென்றார். தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். ஜாதி, இன, சமய வேறுபாடில்லாமல் அனைவருக்காகவும் அன்பின், மனதுருக்கத்தின் ஊழியத்தை அவர்கள் குடும்பமாக தொடர்ந்து செய்து வருகிறார்கள்