Saturday, June 29, 2024
Education

Dr. ரேலா மருத்துவமனையும் தி.நகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய இருதய நோய்க்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் தி.நகர் ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது

Dr. ரேலா மருத்துவமனையும் தி.நகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய இருதய நோய்க்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் தி.நகர் ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

தி. நகர் சட்டமன்ற உறுப்பினர்
ஜெ. கருணாநிதி சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அரிமா சங்கத் தலைவர் ஆனந்த் லக்ஷ்மன் வரவேற்புரை ஆற்றினார். ரேலா மருத்துவமனையின் இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் முகம்மது ஃ பாரூக் முகாம் பற்றிய விளக்கவுரை ஆற்றினார். அரிமா சங்கத்தின் செயலாளர் வீரசோழன் நன்றி கூறினார்.

முகாமில் இரத்த அழுத்தம், இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இருதயப் பிரச்சினை உள்ள 160 நோயாளிகள் முகாமில் கலந்து கொண்டனர். இதில் 118 இருதய நோயாளிகளுக்கு எக்கோ எடுக்கப்பட்டது. 105 நோயாளிகளுக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.

ரேலா மருத்துவமனையின் இருதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர். நரேந்திரகுமார் மருத்துவ ஆலோசனையும் இருதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையையும் எடுத்துரைத்தது நோயாளிகளின் பாராட்டைப் பெற்றது.

ரேலா மருத்துவமனையின் பொது மருத்துவர் சதீஷ் சீனிவாஸ் நோயாளிகளின் பொது மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜெயின் பெண்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நாகராணி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளின் சிறப்பான சேவையை அனைவரும் பாராட்டினர்.

இருதய நோய் சிறப்பு மருத்துவ
முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
ரேலா மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யனார் பெருமாள் மற்றும் அரிமா சங்கத் தலைவர் ஆனந்த் லக்ஷ்மன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்