Saturday, April 20, 2024
Auto

கேப்ஸ்யூல் நிறுவனத்தின் புதிய கேரவன் அறிமுகம் நவீன வசதிகளுடன் கேரவன் வேன்

சென்னையை சேர்ந்த “கேப்ஸ்யூல்ஸ் ஸ்மார்ட் வெகிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ” நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கேரவன் வாகனம் வடிவமைப்பில் பல்லாண்டு அனுபவம் மிக்க “கேப்ஸ்யூல்” நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய கேரவன் வாகனங்களை அதி அற்புதமான வசதிகளுடன் கச்சிதமாக தயாரித்து வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும்.

“கேப்ஸ்யூல்” நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்பு கேரவன் வாகனம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஐந்து நபர்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேரவன் வாகனத்தில் உள்ள லேட்டஸ்ட் வசதிகளை பார்வையிட்ட அனைவரும் வியப்பின் உச்சத்திற்கு சென்றார்கள்.

இந்த வாகனத்தில் வெகிக்கிள் Ac, வண்டி நின்ற பின் ஜெனரேட்டர் அல்லது மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஸ்டாட்டிக் Ac, இன்வர்ட்டர் பேட்டரி, Led விளக்குகள், சோபா, மோட்டரைஸ்டு ரிக்ளைனர்,ஃபோல்டபிள் டேபிள், பெட், கிச்சன், மைக்ரோ ஓவன், இண்டக்சன் ஸ்டவ், பிரிட்ஜ், காபி மேக்கர், மாடுலர் ஸ்டோரேஜ், குளியலறை, டாய்லட், வாட்டர் ஹீட்டர், எலக்ட்ரிக் டாய்லெட்,சிங்க், தண்ணீர் மற்றும் வாட்டர் டேங்க், அளவைக் காட்டும் லெவல் இண்டிகேட்டர்கள் பொறுத்தப் பட்டுள்ளன. கழிவு நீர் தானாக வெளியேறும் நவீன பம்ப் மூலம் வெளியேற்றப்படுகிறது.

கேரவன் வாகனத்தில் பின் சக்கரத்தில் ஏர்சஸ்பென்ஷன் பொறுத்தப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சிறிய அளவில் கூட சோர்வு இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

மேலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க காற்றை தூய்மைப்படுத்தும் ஏர் அயனைசரும் பொருத்தப்பட்டுள்ளது.

பயணிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் வசதிக்கேற்ப டாட்டா விங்கர்,டெம்போ டிராவலர்,பாரத் பென்ஸ்,ஈச்சர்,வோல்வோ, ஸ்கானியா போன்ற
வாகனங்களில் கேரவன் நவீன வசதிகளுடன் வடிவமைத்து தரப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் மூலமாக கேம்பர் வேன், மோட்டர் ஹோம், மெடிக்கல் வேன் மற்றும் எலக்ட்ரிக் ஃபுட் வேன் போன்ற வாகனங்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து தருகிறார்கள்.

“கேப்ஸ்யூல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கேரவன் வாகனத்தில் பயணம் செய்யும் போது விமானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.

நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்கண்ட இணையதள முகவரியை பார்வையிடலாம்